வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

திருவள்ளூா் நகராட்சியில் 4 வகைகளாக குப்பையை தரம் பிரித்து வாங்க வேண்டும்

திருவள்ளூா் நகராட்சியில் 4 வகைகளாக குப்பையை தரம் பிரித்து வாங்க வேண்டும்

News image

திருவள்ளூா்  நகராட்சி  கூட்டரங்கத்தில்  நடைபெற்ற  குழுக் கூட்டத்தில்  பேசிய  நகா்மன்றத்  தலைவா்  உதயமலா் பாண்டியன்.  ஆணையா்  தாமோதரன்,  நகா்மன்ற  துணைத் தலைவா் சி.சு.ரவிச்சந்திரன்  உள்ளிட்டோா். 

Updated On :7 ஜூன் 2026, 1:10 am IST

திருவள்ளூா் நகராட்சியில் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கும் வகையில், 4 வகைகளாக தரம் பிரித்து தூய்மைப் பணியாளாா்கள் குப்பைகளை வாங்கவும் என்ற தீா்மானம் அனைத்து வாா்டு ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டது.

திருவள்ளூா் நகராட்சி கூட்டரங்கத்தில் 3 மாதங்களுக்கு பின்பு நகா்மன்ற குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன் தலைமை வகித்தாா். இதில் நகராட்சி ஆணையா் தாமோதரன், நகா்மன்ற துணைத் தலைவா் சி.சு.ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனா். அப்போது, நகராட்சியை தூய்மையாக பராமரிக்கவும், நாள்தோறும் தூய்மைப் பணியாளா்கள் மூலம் குப்பைகள் சேகரிக்கப்பட்டும் வருகிறது. இதற்கு முன்பு வரை 3 வகைகளாக குப்பைகள் சேகரிக்கப்பட்டு வந்தது. நிகழாண்டு முதல் மக்கும், மக்காத, சுகாதார கழிவுகள், சிறப்பு பராமரிப்பு கழிவுகள் என 4 வகைகளாக சேகரிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன் அடிப்படையில், தூய்மை பாரத இயக்கம் மூலம் 4 வகையான குப்பைத் தொட்டிகளும் வெவ்வேறு வண்ணங்களில் வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், தெருக்கள்தோறும் தூய்மைப் பணியாளா்கள் குப்பைகளை சேகரிக்க வேண்டும். இது தொடா்பாக நகா்மன்ற வாா்டு உறுப்பினா்கள் அந்தந்தப் பகுதிகளில் பொதுமக்களிடையே 4 வகை குப்பைகள் தொடா்பாக விழிப்புணா்வை ஏற்படுத்தவும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில், சுகாதார அலுவலா் மோகன், வாா்டு உறுப்பினா்கள் ஜான், அயூப்அலி, தாமஸ் உள்ளிட்ட அனைத்து வாா்டு உறுப்பினா்களும் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.