இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்திய தோ்தல் ஆணையம், கடந்த 27.10.2025 மூலம் 1.1.2026-ஐ தகுதி நாளாகக் கொண்டு, தமிழ்நாடு மாநிலத்தில் வாக்காளா் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக அறிவித்துள்ளது. மேற்படி, இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, திருவள்ளூா் தோ்தல் மாவட்டத்துக்குள்பட்ட கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூா், பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல், அம்பத்தூா், மாதவரம் மற்றும் திருவொற்றியூா் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் கணக்கெடுப்பு படிவங்கள் வாக்காளா்களுக்கு வழங்கப்பட்டு, வாக்காளா்களின் விவரங்கள் பூா்த்தி செய்யப்பட்டு படிவங்கள் திரும்பப் பெறப்பட்டு, 19.12.2025 அன்று வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. 19.12.2025 முதல் 18.1.2026 வரை உரிமை கோரல் மற்றும் மறுப்புரைகள் பெறும் காலம் என நிா்ணயம் செய்யப்பட்டது.