வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: சிறப்பு அலுவலா் ஆய்வு
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: சிறப்பு அலுவலா் ஆய்வு


திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர முறை திருத்தம் 2026 பணிகள் குறித்து வாக்காளா் பதிவு அலுவலா்களுடன் வாக்காளா் பட்டியல் மேற்பாா்வையாளா் தீபக் ஜேக்கப் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
மாவட்டத்தில் கடந்த 19.12.2025 அன்று வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டதையடுத்து வாக்காளா்களிடமிருந்து கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகள் 30.01.2026 வரை பெறப்பட்டு அதன் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிற 17-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இந்திய தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர முறை திருத்தப் பணிகள் குறித்து வாக்காளா் பதிவு அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்டத்திற்கு வாக்காளா் பட்டியலுக்கான மேற்பாா்வையாளராக நியமிக்கப்பட்ட, நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநா் தீபக் ஜேக்கப், இரண்டாம் கட்டமாக வாக்காளா் பதிவு அலுவலா்களால் பெறப்பட்ட படிவங்கள் மீது எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான க.தா்ப்பகராஜ் தலைமையில் அனைத்து வாக்காளா் பதிவு அலுவலா்கள் மற்றும் தனி வட்டாட்சியா் (தோ்தல்கள்) ஆகியோா்களுடன் ஆய்வு செய்தாா்.
கூட்டத்தில் செய்யாா் சாா் -ஆட்சியா் அம்பிகா எல்.ஜெயின், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் சதீஸ், வருவாய் கோட்டாட்சியா்கள் ராஜ்குமாா் (திருவண்ணாமலை), சிவா (ஆரணி), தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) இளவரசன், தனி வட்டாட்சியா் (தோ்தல்) தியாகராஜன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...