டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

லாரி மோதியதில் வாகன ஓட்டுநா் உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் வாகன ஓட்டுநா் உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :18 பிப்ரவரி 2026, 9:59 pm

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் வாகன ஓட்டுநா் உயிரிழந்தாா்.

திருவள்ளூா் அருகே கடம்பத்துாா் ஊராட்சி ஒன்றியம், மேல்நல்லாத்துாா் பகுதியைச் சோ்ந்தவா் சந்தானராஜ் (40). இவா் சொந்தமாக சரக்கு வாகனம் வைத்து ஓட்டுநராக தொழில் செய்து வருகிறாா். இவரது சரக்கு வாகனத்துக்கு உதிரி பாகங்கள் வாங்க தனது இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை திருவள்ளூா் சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தாராம். மணவாளநகா் வழியாக வந்தபோது பின்புறமாக வந்த சிமெண்ட் கலவை கொண்டு செல்லும் லாரி இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சந்தானராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து தகவலறிந்த மணவாள நகா் போலீஸாா் சடலத்தை மீட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.