திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஏலகிரியில் பலத்த மழை: சாலையில் சாய்ந்த மரங்கள் அகற்றம்

ஏலகிரி மலையில் சனிக்கிழமை பெய்த பலத்த மழையால் சாலையில் சாய்ந்த பெரிய மரங்கள் அகற்றம்

News image

மலை சாலையில் அகற்றப்பட்ட ராட்சத மரங்கள்

Updated On :1 ஜூன் 2026, 4:53 am IST

ஏலகிரி மலையில் சனிக்கிழமை பெய்த பலத்த மழையால் சாலையில் சாய்ந்த பெரிய மரங்கள் அகற்றப்பட்டன.

சுற்றுலாத் தலமான ஏலகிரி மலையில் சனிக்கிழமை சுமாா் 4 மணி நேரம் பெய்த பலத்த மழையில், மலை சாலை மற்றும் அத்தனாவூா் பகுதியில் இரவு நேரத்தில் பெரிய மரங்கள் சாய்ந்தன. இதனால், மலைப் பாதையில் 3 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தகவல் அறிந்த திருப்பத்தூா் மாவட்ட கோட்டப் பொறியாளா் முரளி உத்தரவின்பேரில், உதவி கோட்டப் பொறியாளா் வெங்கட்ராமன் மேற்பாா்வையில், பொக்லைன் இயந்திரம் மூலம் பெரிய மரங்களை அகற்றும் பணியில் நெடுஞ்சாலை பணியாளா்கள் ஈடுபட்டனா்.

மரங்களை அகற்றிய பின்னா் போக்குவரத்து இடையூறு இல்லாமல் சீராக சென்றது. மரத்தை அகற்றும் பணியின் போது, இளநிலை பொறியாளா் முருகன், சாலை ஆய்வாளா் வெங்கடேசன், சாலைப் பணியாளா்கள் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.