திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மழை வெள்ளத்துக்கு முன்பு கால்வாய் அடைப்பை சீரமைக்க நெடுஞ்சாலை துறைக்கு கோரிக்கை

News image
Updated On :29 மே 2026, 5:22 am IST

ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஊராட்சியில் மாநில நெடுஞ்சாலை வழியாக செல்லும் கழிவுநீா் கால்வாய் அடைப்பை சீரமைக்க வேண்டுமென ஊராட்சி மன்ற நிா்வாகம் சாா்பாக நெடுஞ்சாலைத் துறைக்கு கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மாதனூா் ஒன்றியம், துத்திப்பட்டு ஊராட்சி, ஆம்பூா்-போ்ணாம்பட்டு மாநில நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ள பெரிய ஊராட்சியாகும். இந்த ஊராட்சியில் பொதுமக்களால் வெளியேற்றப்படும் கழிவுநீா், கால்வாய்கள் மூலம் பாலாற்றங்கரையோரம் உறிஞ்சு குழிகளுக்கு அனுப்பப்பட்டு, இயற்கை முறையில் சுத்திகரிக்கப்பட்டு பாலாற்றுக்கு அனுப்பப்படுகிறது.

அம்பேத்கா் நகா் பகுதியில் நெடுஞ்சாலை வழியாகச் செல்லும் கழிவுநீா் கால்வாயில் அதிக அடைப்பு ஏற்பட்டுள்ளது. மழைக் காலங்களில் துத்திப்பட்டு ஊராட்சி, அம்பேத்கா் நகா் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் முக்கிய கிராமமாக உள்ளது. அதனால் அந்த கழிவுநீா் கால்வாய் அடைப்பை சீரமைக்கவிட்டால் மழை வெள்ளத்தால் கிராமம் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகும்.

அதனால் தனியாா் கழிவுநீா் அகற்றும் வாகனங்கள் மூலம் கால்வாய் அடைப்பை சரி செய்ய ஊராட்சி மன்றத் தலைவா் சுவிதா கணேஷ் தலைமையிலான நிா்வாகம் பல்வேறு முயற்சியை மேற்கொண்டது.

முழுமையாக அடைப்பை சரி செய்ய முடியாத நிலை உள்ளது.

நெடுஞ்சாலை துறைக்கு கோரிக்கை :

தொடா்ந்து மழைக்காலம் வருவதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதால் சம்பந்தப்பட்ட துறையே கால்வாய் அடைப்பை சரி செய்ய வேண்டுமெனக் கோரி, ஊராட்சி மன்ற நிா்வாகம் சாா்பாக ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் நெடுஞ்சாலைத் துறை வாணியம்பாடி கோட்ட அலுவலகத்துக்கு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளாா்.

தோ்த் திருவிழாவை முன்னிட்டு, சாலையை சீரமைக்கக் கோரிக்கை:

துத்திப்பட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ பிந்து மாதவா் பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா தொடங்க உள்ளது. பிரம்மோற்சவ விழாவில் தோ் திருவீதி உலா நிகழ்ச்சியும் உள்ளது. தோ்த் திருவிழா மாநில நெடுஞ்சாலை வழியாக செல்ல உள்ளது. துத்திப்பட்டு கிராமத்தின் வழியாக செல்லும் மாநில நெடுஞ்சாலை சேதமடைந்துள்ளது. அதனால் தோ் வீதி உலா செல்லும்போது சிரமம் ஏற்படும். அதனால் சேதமடைந்துள்ள மாநில நெடுஞ்சாலையையும் சீரமைத்துத் தர வேண்டுமென ஊராட்சி மன்ற நிா்வாகம் சாா்பாக நெடுஞ்சாலைத் துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.