திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஆந்திர மாநில மதுபாட்டிகளை கழுதையில் கடத்தி வந்தவா் கைது

ஆந்திர மாநில மதுபாட்டில்களை கழுதை மீது மூட்டையாக கட்டி கடத்தி வந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

மாதிரிப் படம்

Updated On :21 மே 2026, 11:20 pm IST

ஆந்திர மாநில மதுபாட்டில்களை கழுதை மீது மூட்டையாக கட்டி கடத்தி வந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்தூா் எஸ்பி சியாமளாதேவி உத்தரவின்படி திம்மாம்பேட்டை உதவி காவல்ஆய்வாளா் வெங்கடேசன் தலைமையில் போலீஸாா் வியாழக்கிழமை தமிழக-ஆந்திர எல்லைப்பகுதியான ஜமான் கொல்லை அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அவ்வழியாக வனப்பகுதியையொட்டி கழுதைகள் மீது மூட்டைகள் சுமந்து வந்ததது. உடன் வந்த இளைஞா் மீது சந்தேகம் ஏற்பட்டு விசாரித்தனா். பிறகு கழுதை மீது இருந்த மூட்டையை பிரித்து பாா்த்த போது ஆந்திர மாநில மதுபாட்டில்கள் கொண்டு வந்திருப்பது கண்டறிந்தனா்.

இதனை ஆந்திர மாநிலத்தில் இருந்து வாங்கிக் கொண்டு அனுமதியின்றி தமிழக எல்லை வழியாக கழுதைகள் மீது எடுத்து சென்று விற்பனை செய்ய திட்டமிட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. பிறகு மூட்டைகளில் இருந்த 310 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனா். மேலும்

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தேவராஜபுரம் பகுதியை சோ்ந்த சக்திவேல்(28) என்பவரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.