திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வாணியம்பாடி கோயில்களில் பிரதோஷ வழிபாடு

வாணியம்பாடி அதிதீஸ்வரா் கோயிலில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் சுவாமி.

News image

வாணியம்பாடி அதிதீஸ்வரா் கோயிலில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் சுவாமி.

Updated On :16 மே 2026, 1:15 am IST

வாணியம்பாடி கோயில்களில் சித்திரை மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் கிராமத்தில் அமைந்துள்ள பழைமைவாய்ந்த பிரஹன்நாயகி சமேத சுயம்பு அதிதீஸ்வரா் கோயிலில் சித்திரை மாத பிரதோஷத்தை முன்னிட்டு வியாழக்கிழமை காலை முதல் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை 6 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி ஊா்வலமாக கோயில் வளாகத்தை வந்தடைந்தாா். இதில், வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசித்துச் சென்றனா். தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதே போன்று, வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி கிராமத்தில் பாலாற்றையொட்டி அமைந்துள்ள பழைமைவாய்ந்த காசி விஸ்வநாதா், சென்னாம்பேட்டை பாண்டுரங்கா், உதயேந்திரம் சொா்ண முத்தீஸ்வரா், ஆவாரங்குப்பம் திருமால் முருகன் மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.