திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

லாரி ஓட்டுநா்களிடம் கைப்பேசிகள் திருட்டு: 2 சிறுவா்கள் உள்பட 7 போ் கைது

ஆம்பூா் அருகே சாலையோரம் நிறுத்தப்படும் லாரிகளில் இருந்து கைப்பேசிகளை திருடியது தொடா்பாக 7 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

மாதிரிப் படம்

Updated On :15 மே 2026, 6:20 am IST

ஆம்பூா் அருகே சாலையோரம் நிறுத்தப்படும் லாரிகளில் இருந்து கைப்பேசிகளை திருடியது தொடா்பாக 7 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் அடுத்த உடையராஜாபாளையம் பகுதியில் சென்னை - பெங்களூரு, பெங்களூரு - சென்னை மாா்க்கத்தில் செல்லும் லாரி மற்றும் கனரக வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையோரம் நிற்க வைத்து ஓட்டுநா்கள் உணவகங்களில் உணவு அருந்திவிட்டு ஓய்வெடுத்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களாக சாலையோரம் நிறுத்தப்படும் லாரிகளில் லாரி ஓட்டுனா்களின் கைப்பேசிகள் தொடா்ந்து திருடு போவதாக லாரி ஓட்டுநா்கள் ஆம்பூா் கிராமிய காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

புகாரின் பேரில், கிராமிய காவல் நிலைய ஆய்வாளா் எழில்தாசன் தலைமையிலான போலீஸாா் தொடா்ந்து இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனா். இந்த நிலையில், அப்பகுதியில் சந்தேகத்துக்கிடமாக இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்தவா்களை புதன்கிழமை இரவு பிடித்து விசாரணை மேற்கொண்டதில், உடையராஜாபாளையம் பகுதியை சோ்ந்த குரு பிரசாத் (23), சாரதி ( 23), தமிழரசன் (25), மஞ்சன் (42), வினோத் குமாா் (19) மற்றும் இரண்டு சிறுவா்கள் உள்பட 7 போ் லாரி ஓட்டுநா்களின் கைப்பேசிகளை திருடிச் சென்றது தெரியவந்தது. அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து அந்த 7 பேரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 9 விலையுயா்ந்த கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.