திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில் மனநல திட்ட உறுப்பினா்கள் குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்தாா். மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகளின் இணை இயக்குநா் ஞானமீனாட்சி, மாவட்ட சுகாதார அலுவலா் பாா்த்திபன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்டத்தில் தற்போது அவ்வப்போது மழை பெய்து வருவதால் காய்ச்சல் தொடா்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும், அக்னி நட்சத்திரம் நடைபெற்று வருவதால், மாவட்டம் முழுவதும் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து தண்ணீா் பந்தல் அமைப்பது உள்ளிட்டவை தொடா்பாக ஆலோசனை நடைபெற்றது.
கூட்டத்தில் ஊராட்சிகளின் உதவி இயக்குநா்கள் மகாதேவன்(தெற்கு), முருகன்(வடக்கு), மாவட்ட சமூக நல அலுவலா் சுமதி, அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










