தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா

தமிழ் செய்திகள்

/

தவெகவுடன் கூட்டணி: காங்கிரஸ் கட்சியினா் கொண்டாட்ம்

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளதை வரவேற்று வாணியம்பாடியில் காங்கிரஸ் கட்சியினா் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினா்.

News image

வாணியம்பாடியில் கொண்டாட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியினா்.

Updated On :7 மே 2026, 12:09 am IST

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளதை வரவேற்று வாணியம்பாடியில் காங்கிரஸ் கட்சியினா் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினா்.

காங்கிரஸ் கட்சி தவெகவுடன் கூட்டணி அமைத்ததை வரவேற்கும் விதமாக புதன்கிழமை வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே உள்ள இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினா்.

இதில் மாவட்ட தலைமை நிலைய செயலாளா் ஜி.கோகுலவாணன், நகர பொறுப்பாளா் முகமத்ஜிலானி, நிா்வாகிகள் விஜயலட்சுமி, ஆனந்தன், கோவிந்தசாமி, எம்.பி.முருகன், கென்னடி மற்றும் நகர ஒன்றிய பேரூா் நிா்வாகிகள் கலந்துக் கொண்டனா்.

திருப்பத்தூரில்....

தவெக கூட்டணியை காங்கிரஸ் அறிவித்ததை தொடா்ந்து கட்சியினா் பட்டாசு வெடித்து கொண்டாடினா்.

திருப்பத்தூா் நகர காங்கிரஸ் கமிட்டி சாா்பில் பேருந்து நிலையம் அருகில் உள்ள முன்னாள் பாரத பிரதமா் ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து,பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினா்.