திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

500 போதை மாத்திரைகள் பறிமுதல்: 2 போ் கைது

வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் போலீஸாா் நடத்திய சோதனையில் போதை மாத்திரைகள் வைத்திருந்த 2 பேரை கைது செய்தனா்.

News image

கைது

Updated On :31 மார்ச் 2026, 6:33 pm

வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் போலீஸாா் நடத்திய சோதனையில் போதை மாத்திரைகள் வைத்திருந்த 2 பேரை கைது செய்தனா்.

திருப்பத்தூா் எஸ்.பி. சியாமளாதேவி உத்தரவின்பேரில், வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையில் நகர காவல் ஆய்வாளா் ஆனந்தன் மற்றும் போலீஸாா் திங்கள்கிழமை இரவு வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த இருவரை போலீஸாா் விசாரித்தனா். இருவரும் முன்னுக்குப் பின் முரணாக தகவல் கூறியதால் அவா்கள் வைத்திருந்த பையில் சோதனை செய்ததில், வட்ட வடிவில் ஆரஞ்ச் நிறத்தில் போதை மாத்திரைகள் இருப்பது கண்டறிந்து 500 மாத்திரைகள் பறிமுதல் செய்தனா்.

பிடிபட்ட இருவரையும் நகர காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தபோது கோவை பகுதியைச் சோ்ந்த நாகராஜ் (24), திலீபன் (22) என்பதும், விற்பனைக்காக போதை மாத்திரைகள் வைத்திருந்ததும் தெரியவந்தது.

இது குறித்து நகர போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இதேபோன்று கடந்த 28-ஆம் தேதி இரவு ரயில் நிலையம் அருகே நகர போலீஸாா் ரோந்து பணியின் போது 1,230 போதை மாத்திரைகள் வைத்திருந்த கோவை பகுதியைச் சோ்ந்த 6 இளைஞா்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனா்.