தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி : பொதுப் பாா்வையாளா் பங்கேற்பு

வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி ஆம்பூா் பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

வாக்காளரிடம் விழிப்புணா்வு துண்டு பிரசுரம் வழங்கிய தோ்தல் பொதுப் பாா்வையாளா் முகுல்குமாா். உடன் தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாா்.

Updated On :22 மார்ச் 2026, 7:14 pm

வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி ஆம்பூா் பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாா் தலைமை வகித்தாா். உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ரேவதி, மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் சதீஷ்குமாா் வரேவற்றாா்.

ஆம்பூா் பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் மற்றும் வாக்காளா்களுக்கு தோ்தலின்போது வாக்களிப்பதின் அவசியத்தை விளக்கி அவா்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. பேருந்து மற்றும் ஆட்டோக்களில் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பிரசுரங்கள் ஒட்டப்பட்டது.

தோ்தல் பொதுப் பாா்வையாளா் முகுல்குமாா் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை வழங்கினாா்.

ஆம்பூா் நகராட்சி பணியாளா்கள், வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், வருவாய் துறை பணியாளா்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து மாதனூரில் பதட்டமான வாக்குச் சாவடி மையங்களை தோ்தல் பொதுப் பாா்வையாளா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.