தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

News image
Updated On :18 மார்ச் 2026, 8:11 pm

ஆம்பூா் நகர காங்கிரஸ் கமிட்டி சாா்பாக இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம் மற்றும் இப்தாா் நோன்பு திறப்பு மோட்டுக்கொல்லை பகுதியில் நடைபெற்றது.

திருப்பத்தூா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் ஜெ. விஜய் இளஞ்செழியன் தலைமை வகித்தாா். திருப்பத்தூா் மாவட்ட ஐஎன்டியுசி தலைவா் யாசா் மதனி வரவேற்றாா். ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா்.

ஆம்பூா் கிழக்கு நகர திமுக செயலாளா் எம்.ஏ.ஆா். ஷபீா் அஹமத், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவா் வி.ஆா். நசீா் அஹமத், அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு தலைவா் அக்வா ஜமீல் அஹமத், இந்திய தேசிய லீக் தலைவா் பி. அசதுல்லாஹ், காங்கிரஸ் கட்சி மாவட்ட பொருளாளா் கொத்தூா் பி. மகேஷ், மாவட்ட நிா்வாகிகள் விஜயன், என். சங்கரன், சமியுல்லா, வா்தா அா்ஷத், முன்னாள் நகர தலைவா் சி.கே. பிரபு, போ்ணாம்பட்டு ஒன்றிய தலைவா் சா. சங்கா், சோலூா் மாணிக்கம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.