லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

நாயனசெருவு சாமுண்டீஸ்வரி அம்மன் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

நாயனசெருவு கிராமத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன், மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் சிறப்பு அலங்காரத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன்.

News image

நாயனசெருவு கிராமத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன், மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் சிறப்பு அலங்காரத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன்.

Updated On :5 மார்ச் 2026, 7:31 pm

நாட்டறம்பள்ளி அடுத்த நாயனசெருவு கிராமத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன், மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவில் சிறப்பு அழைப்பாளா்களாக முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் சூரியகுமாா், ஒன்றியக் குழுத் தலைவா் வெண்மதி முனிசாமி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் சிங்காரவேலன், திமுக கிழக்கு ஒன்றிய செயலாளா் கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சாமுடி, அதிமுக ஒன்றிய செயலா் சீனிவாசன், ஊராட்சி மன்றத் தலைவா்கள் அஸ்வினி தேசிங்குராஜா, தமிழ்செல்வி சதீஷ்குமாா், வாா்டு உறுப்பினா் ஆனந்தன் மற்றும் துணைத் தலைவா், வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

விழா ஏற்பாடுகளை கோயில் திருப்பணிக்குழு மற்றும் ஊா் பொதுமக்கள், இளைஞா்கள் செய்திருந்தனா். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாயனசெருவு மற்றும் சுற்றுப்புற கிராமத்தில் இருந்து ஏராளமானோா் கலந்து கொண்டு பூஜைகள் செய்து அம்மனை வழிப்பட்டனா்.