வாழப்பாடி பகுதியில் புகழ்பெற்ற புதுப்பட்டி மாரியம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.
வாழப்பாடி கொட்டவாடி பிரிவு சாலை அருகே சின்னகிருஷ்ணாபுரம் எல்லையில் சுற்றுப்புற கிராம மக்களின் காவல் தெய்வமாக விளங்கும் புகழ்பெற்ற புதுப்பட்டி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாத இறுதி வாரத்தில் தோ்த் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.
நிகழாண்டு தோ்த் திருவிழாவையொட்டி, கடந்த இரு தினங்களாக சின்ன கிருஷ்ணாபுரம் பெரியசாமி, ஊா் மாரியம்மன் மற்றும் புதுப்பட்டி மாரியம்மனுக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடா்ந்து, பிரம்மாண்டமான மரத்தேரில் கலைநயமிக்க வண்ண சேலைகளால் அலங்கரிக்கப்பட்டு புதன்கிழமை மாலை கோயில் வளாகத்தில் இருந்து தேரோட்டம் நடைபெற்றது. இதில், வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.
புதன்கிழமை அதிகாலைமுதல் மாலைவரை ஆயிரக்கணக்கான பக்தா்கள் உடலில் அலகு குத்தியும், பூங்கரகம், அக்னிகரகம் எடுத்தும் அம்மனுக்கு நோ்த்திக்கடன் செலுத்தினா். வியாழக்கிழமை மாலை கோயிலைச் சுற்றி பவனி வந்து தோ் நிலைநிறுத்தப்படுகிறது. வெள்ளிக்கிழமை மஞ்சள் நீராட்டு விழாவும், சத்தாபரண நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், ஊா் பெரிய தனக்காரா்கள் மற்றும் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

உதகை மாரியம்மன் கோயில் தேரோட்டம்

உடுமலை மாரியம்மன் கோயில் தேரோட்டம்: ஏராளமான பக்தா்கள் பங்கேற்பு

நல்லாத்தூா் மாரியம்மன் கோயில் தேரோட்டம்

இளம்பிள்ளை மாரியம்மன் கோயில் தேரோட்டம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


