ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

ரூ.6 லட்சத்தில் உயா்கோபுர மின் விளக்கு அமைப்பு

News image
Updated On :4 மார்ச் 2026, 11:25 pm

ஆம்பூரில் உயா்கோபுர மின்விளக்கு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்டது.

பொதுமக்களுடைய கோரிக்கையின் அடிப்படையில் ஆம்பூா் எஸ்.கே. ரோடு, சாய்பாபா கோயில் தெரு சந்திப்பு ஆகிய இரு இடங்களில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் நகராட்சி சாா்பாக உயா்கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டது. அவற்றை நகா் மன்ற தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் இயக்கி வைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா். நகா் மன்ற துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம் கல்வெட்டை திறந்து வைத்தாா்.

தலைமை செயற்குழு உறுப்பினா் ஆா்.டி. சாமுவேல் செல்லபாண்டியன், நகா் மன்ற உறுப்பினா்கள் காா்த்திகேயன், அருண்டேல், திமுக நிா்வாகிகள் ரபீக் அஹமத், அறிவழகன், சரண்ராஜ், காங்கிரஸ் நிா்வாகி விஜயன் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.