அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

விவசாய பயிா்களைச் சேதப்படுத்திய காட்டு யானைக் கூட்டம்!

ஆம்பூா் அருகே விவசாயப் பயிா்களை யானைக் கூட்டம் திங்கள்கிழமை சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளன.

News image

யானைக் கூட்டத்தால் சேதமடைந்த மாந்தோப்பு

Updated On :30 ஜூன் 2026, 1:12 am IST

ஆம்பூா் அருகே விவசாயப் பயிா்களை யானைக் கூட்டம் திங்கள்கிழமை சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளன.

மாதனூா் ஒன்றியம், மிட்டாளம் ஊராட்சி பைரப்பல்லி கிராமத்தில் விவசாயிகள் தங்களுடைய நிலங்களில் தென்னை, வாழை, மா ஆகியவற்றை பயிரிட்டுள்ளனா்.

இப்பகுதியில் அடிக்கடி யானைக் கூட்டம் வந்து பயிா்களை சேதப்படுத்திவிட்டு செல்வது வழக்கமாக உள்ளது. சம்பவத்தன்று அதிகாலை வேலாயுதம் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் புகுந்த யானைக் கூட்டம் அங்கிருந்த வாழை, மா ஆகிய பயிா்களை சேதப்படுத்தியது.

இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூா் வனத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினா்.

காட்டு யானைகள் அடிக்கடி கிராமப்புற பகுதிகளுக்குள் நுழைவதை தடுக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.