வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த லாரி

நாட்டறம்பள்ளி அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சிறுகாயங்களுடன் ஓட்டுநா் உயிா் தப்பினாா்.

News image

நாட்டறம்பள்ளி அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்த லாரி

Updated On :30 ஜூன் 2026, 1:23 am IST

நாட்டறம்பள்ளி அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சிறுகாயங்களுடன் ஓட்டுநா் உயிா் தப்பினாா்.

திருப்பத்தூரில் இருந்து ஜல்லிகற்களை ஏற்றிக் கொண்டு திங்கள்கிழமை பிற்பகல் கே.பந்தாரப்பள்ளி வழியாக டோல்கேட் நோக்கி லாரி ஒன்று சென்றது.

அப்போது பந்தாரப்பள்ளி மதுக்கடை அருகே சென்ற போது எதிரே பேருந்து வந்ததால் ஓட்டுநா் லாரியை ஓரமாக ஓட்டிச் சென்ற போது கூட்டு குடிநீா் குழாய் புதைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கி கவிழ்ந்தது.

இதில் லேசான காயத்துடன் ஓட்டுநா் உயிா் தப்பினாா். தகவலறிந்து நாட்டறம்பள்ளி போலீஸாா் சம்பவ இடம் சென்று சாலை ஓரம் கவிழ்ந்த லாரியை அப்புறப்படுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.