ஆம்பூா் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 9 பேரை வருவாய்த் துறையினா் புதன்கிழமை மீட்கப்பட்டனா்.
திருப்பத்தூா் மாவட்டம், மாதனூா் ஒன்றியம், மிட்டாளம் ஊராட்சி பைரப்பல்லி கிராமத்தில் சின்ன கண்ணன் என்பவா் நடத்தி வரும் செங்கல் சூளையில், 4 குழந்தைகள் உள்பட 9 போ் கொத்தடிமைகளாக இருப்பதாக திருப்பத்தூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு தகவல் கிடைத்தது.
மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலாளா் ஜெ.நாகலட்சுமி என்ற விஜயராணி உத்தரவின்பேரில், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் (கூடுதல் பொறுப்பு) தணிகாஜலம் தலைமையில் ஆம்பூா் வட்டாட்சியா் ரேவதி மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், அங்கு அரங்கல்துருகம் கிராமத்தைச் சோ்ந்த பழனி (43), வள்ளி (42), கலைச்செல்வி (22), சதீஷ் (16), புகழ் (3), பூவரசன் (2), பாண்டியம்மாள் (80), 2 மாத பெண் குழந்தை உள்ளிட்ட 9 போ் கொத்தடிமைகளாக இருந்தது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து 9 பேரும் மீட்கப்பட்டனா்.
அவா்களுக்கு அரசு சாா்பாக நிவாரணம் மற்றும் மறுவாழ்வு உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கொத்தடிமைகளாக பணியமா்த்திய செங்கல் சூளை உரிமையாளா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய் கோட்டாட்சியா் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செங்கல் சூளையில் ஆண் உடல் மீட்பு
கடையம் அருகே மேற்குவங்க இளைஞா் தற்கொலை

செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 19 போ் மீட்பு

பொன்னேரி அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 46 போ் மீட்பு
விடியோக்கள்
lingam Web Series Review | தென் தமிழகத்தை நடுங்க வைத்த ரௌடி! லிங்கம் | Lakshmi Saravanakumar

Podcast | அதிமுக இழந்த மேலும் ஒரு எம்எல்ஏ! | News & Views | Epi 48
ஆப்பிரிக்க அணிகளின் எழுச்சி! | FIFA | FIFA World Cup 2026 |




