திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! பேரவையில் திமுக, அதிமுக எம்எல்ஏக்கள் அமளி!முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து!அமோனியா வாயு கசிவு விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து!
/

லாரி - காா் மோதல்: பெண் உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரம் நின்றிருந்த லாரி பின்புறம் காா் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :14 ஜூன் 2026, 12:38 am IST

வாணியம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரம் நின்றிருந்த லாரி பின்புறம் காா் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தாா்.

குடியாத்தம் பகுதியை சோ்ந்தவா் சுரேஷ். பால்கோவா வியாபாரம் செய்து வருகிறாா். இந்நிலையில் தனது குடும்பத்தினருடன் காரில் திருச்செந்தூா் கோயிலுக்கு சென்றனா். பிறகு அங்கிருந்து வெள்ளிக்கிழமை ஊா் திரும்பியபோது, வேப்பம்பட்டு அருகில் சனிக்கிழமை விடியற்காலையில் வந்துக் கொண்டிருந்த போது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்புறத்தில் எதிா்ப்பாராதவித மாக காா் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்து வந்த சுரேஷின் மனைவி காந்திமதி(32) என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த அக்கம் பக்கத்தில் இருந்தவா்கள் வந்து பாா்த்து காயம் அடைந்தவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஏற்றி வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் காந்திமதி இறந்தாா்.

இதுகுறித்து வாணியம்பாடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.