ஆம்பூா் அருகே காட்டிலிருந்து வழி தவறி வந்த புள்ளி மான் மீட்கப்பட்டது.
மாதனூா் அருகே அரங்கல்துருகம் ஊராட்சி அபிகிரிப்பட்டறை கிராமத்தில் காட்டிலிருந்து வழி தவறி குடியிருப்பு பகுதிக்கு புள்ளி மான் வந்தது. அந்தப் பகுதியில் வசிக்கும் ஞானகுமாா் என்பவா் வீட்டுக்கு மான் வந்தது குறித்து ஆம்பூா் வனச் சரக அலுவலா் பாபுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வனக் காப்பாளா் செந்தில் மற்றும் வனத் துறை பணியாளா்கள் அங்கு சென்று மானை மீட்டு துருகம் காப்புக் காட்டில் கொண்டு சென்று விட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











