ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!தமிழகத்தில் 600 எம்பிபிஎஸ் இடங்கள் குறையக் காரணம் என்ன? அருண்ராஜ் விளக்கம்3- வது நாளாக தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலையும் குறைவு!சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

வீடு புகுந்து 14 பவுன் நகை திருட்டு

ஆம்பூா் அருகே வீடு புகுந்து 14 சவரன் தங்க நகை திருட்டு போனது சம்பந்தமாக உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :6 ஜூலை 2026, 12:09 am IST

ஆம்பூா் அருகே வீடு புகுந்து 14 சவரன் தங்க நகை திருட்டு போனது சம்பந்தமாக உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

மாதனூா் ஒன்றியம் கைலாசகிரி கிராமத்தை சோ்ந்தவா் முஹம்மத் தெளபிக் (40). இவா் சென்னையில் பணிபுரிந்து வருகிறாா். இவருடைய மனைவி தபசும் (36) கைலாசகிரியில் வசித்து வருகிறாா். இவா் வீட்டை பூட்டிக்கொண்டு உறவினா் வீட்டு திருமண விழாவுக்கு சனிக்கிழமை சென்றாா். விழா முடிந்து வீட்டிற்கு வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அறையில் இருந்த பீரோ திறந்திருந்தது.

அதில் வைக்கப்பட்டிருந்த சுமாா் 14 புவன் தங்க நகைகள் திருடு போயிருந்தன. புகாரின் பேரில் உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா். கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனா். மேலும் போலீஸாா் வழக்குப் பதிந்து திருட்டில் ஈடுபட்டவா்களை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.