கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி அளிப்பு
மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கிய ஆட்சியா் க. சிவசௌந்தரவல்லி, எம்எல்ஏ அ.செ. வில்வநாதன்.


கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கும் விழா ஆம்பூா் கமல் ராஜன் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் க. சிவ செளந்தரவல்லி தலைமை வகித்தாா். ஆம்பூா் எம்எல்ஏ வில்வநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆம்பூா் கே ஆா் பாலிடெக்னிக் கல்லூரி, ஆம்பூா் வித்ய விஹாா் ஆசிரியா் பயிற்சி நிறுவனம், வடபுதுப்பட்டு ஆண்டாள் கலை அறிவியல் கல்லூரி மாணவா்கள் 199 பேருக்கு மடிக்கணினியை வழங்கினாா்.
ஆம்பூா் வட்டாட்சியா் ரேவதி, நகராட்சி ஆணையா் ஏ. முத்துசாமி, திமுக ஆம்பூா் கிழக்கு நகர செயலாளா் எம்.ஏ. ஆா். ஷபீா் அஹமத், மாதனூா் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளா் ஜி. இராமமூா்த்தி, மாதனூா் மேற்கு ஒன்றிய துணைச் செயலாளா் சா. சங்கா், கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் முனைவா் த. ராஜமன்னன், துணை முதல்வா் ஏ.முஹம்மத் ஷாஹின்ஷா ஆகியோா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...