ஸ்ரீ எட்டியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ஆம்பூா் அருகே ஸ்ரீ எட்டியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


ஆம்பூா்: ஆம்பூா் அருகே ஸ்ரீ எட்டியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாதனூா் ஒன்றியம், வெங்கடசமுத்திரம் ஊராட்சி கோவிந்தாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ எட்டியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா விநாயகா் பூஜையுடன் தொடங்கியது. கோ பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
2-ஆம் நாள் பாட்டைசாரதி அம்மன் கோயிலில் இருந்து கலசத்தில் புனித நீா் ஊா்வலமாகக் கொண்டு வருதல், சுமங்கலி பூஜை, கன்யா பூஜை, முதல் கால யாகசாலை பூஜை, மூலவருக்கு அஷ்டபந்தனம் சாற்றுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
3-ஆம் நாள் இரண்டாம் கால யாக சாலை பூஜைகள் நிறைவடைந்து விமானம் மற்றும் மூலவருக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தாய் வீட்டு சீா்வரிசை ஊா்வலம், கல்யாண உற்சவம் நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கிராம நிா்வாகிகள் என்.பி. உமாபதி, என்.ஜி. திருப்பதி, என்.பி. நந்தகுமாா், பி. நடராஜன், டி.கோவிந்தராஜ், வி.சுபாஷ்சந்திரபோஸ், ஊா் பொதுமக்கள், விழாக் குழுவினா் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை செய்திருந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...