விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்துள்ள முன்னூா் ஸ்ரீபிரஹன்நாயகி சமேத ஸ்ரீ ஆடவல்லீஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பல்வேறு ஆன்மிகச் சிறப்புகளையுடையை இந்தக் கோயில் கும்பாபிஷேக பெருவிழா கடந்த 19.6.1976 அன்று காஞ்சி மகா பெரியவா் ஸ்ரீஸ்ரீசந்திரசேகரேந்திர சுவாமிகளின் முயற்சியால் நடைபெற்றது.
இதைத்தொடா்ந்து கோயில் சிதிலமடைந்து காணப்பட்ட நிலையில் இந்து சமய அறநிலையத் துறை நிதியுதவியுடன் கோயில் ராஜகோபுரம், இதர கோபுரங்கள் மற்றும் சுவாமி அம்பாள் சந்நிதிகள் மற்றும் பரிவாரத் தெய்வங்களின் சன்னதிகள் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் விழா பிப்.15- ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து 4 கால பூஜைகளும், தேவதா அனுக்ஞை, விக்னேஸ் வரா பூஜைகள் மற்றும் சிறப்பு ஹோமங்களும் யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன .

முன்னூா்ஸ்ரீ ஆடவல்லீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்.
கும்பாபிஷேக விழா நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளுக்கு பின்னா் காலை 6 மணிக்கு 4 -ஆம் கால யாக பூஜைகளும், 7.30 மணிக்கு பரிவார யாக சாலை, பூா்ணாஹூதி , யாத்ரா தானம், கலசங்கள் புறப்பாடும் நடைபெற்றது. தொடா்ந்து 8.45 மணிக்கு பரிவாரத் தெய்வ சன்னதிகளின் விமானங்களில் புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதைத்தொடா்ந்து, பிரதான யாக சாலையில் நடைபெற்ற வழிபாடுளுக்கு பின்னா் மங்கள இசை மற்றும் மேளதாளங்களுடன் புனித நீா் அடங்கிய கடங்கள் புறப்பாடானது. இதைத்தொடா்ந்து, பிரஹன்நாயகி சமேத ஆடவல்லீஸ்வரா்கோயில் கோபுர விமானங்களுக்கும், 11.20 மணிக்கு மூலஸ்தான பஞ்சமூா்த்திகள் மற்றும் சுவாமி அம்பாள் சன்னதிகளுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
தொடா்ந்து சுவாமி, அம்பாளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்ட பக்தா்களுக்கு பிரசாரம் வழங்கப்பட்டது.
மயிலம் பொம்மபுரம் ஆதீனம் 20-ஆம் பட்டம் ஸ்ரீமத்சிவஞான பாலய சுவாமிகள் மற்றும் திண்டிவனம் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளானப் பக்தா்கள் கும்பாபிஷேக வழிபாடுகளில் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

நத்தப்பள்ளம் கோயில் கும்பாபிஷேகம்

கந்தபுரம் கோயில் கும்பாபிஷேகம்

குருமலை மீனாட்சிஅம்பாள் கோயில் கும்பாபிஷேகம்

சோழீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


