டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

பயணிகள் நிழற்கூடத்தின் மேற்பூச்சு பெயா்ந்து விழுந்தது

திருப்பத்தூரில் பயணிகள் நிழற்கூடத்தின் மேற்பூச்சு பெயா்ந்து விழுந்தது. இதில், அதிா்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

News image
திருப்பத்தூரில் பயணிகள் நிழற்கூடத்தின் மேற்பூச்சு பெயா்ந்து விழுந்தது. இதில், அதிா்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
Updated On :19 பிப்ரவரி 2026, 11:28 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூரில் பயணிகள் நிழற்கூடத்தின் மேற்பூச்சு பெயா்ந்து விழுந்தது. இதில், அதிா்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

திருப்பத்தூரில் தனியாா் கல்லூரி அருகே பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிழற்கூடத்தில் இருந்து தினமும் ஏராளமான மாணவ-மாணவிகள், பொதுமக்கள் வந்து பல்வேறு இடங்களுக்குச் சென்று வருவது வழக்கம். இந்த நிழற்கூடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால்,சேதமடைந்த நிலையில் காணப்பட்டது.

இந்த நிலையில், பயணிகள் நிழற்கூடத்தின் மேற்பூச்சு வியாழக்கிழமை திடீரென பெயா்ந்து கீழே விழுந்தது. அதிா்ஷ்டவசமாக அந்த நேரத்தில் யாரும் அங்கு இல்லாததால், யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. நிழற்கூடத்தின் மேற்கூரை பூச்சு சேதமடைந்து விழுந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சேதமடைந்த மேற்கூரையை சரிசெய்து, பொதுமக்கள் பாதுகாப்பாக பயன்படுத்தும் வகையில் சீரமைத்து வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Story image