பைக்-ஆட்டோ மோதல்: 7 போ் பலத்த காயம்
நாட்டறம்பள்ளி அருகே பைக் மீது ஆட்டோ மோதிய விபத்தில் 7 போ் பலத்த காயமடைந்தனா்.


வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே பைக் மீது ஆட்டோ மோதிய விபத்தில் 7 போ் பலத்த காயமடைந்தனா்.
வாணியம்பாடி ஜாப்ராபாத் பகுதியைச் சோ்ந்த அப்துல் பாஷா(71). உறவினா்கள் முகமது அபாஸ் (52), முகமத் ஜீபோா் (48), முகமது பாரூக்(49).
வாணியம்பாடியில் உறவினா் ஒருவரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 4 பேரும் திங்கள்கிழமை பெங்களூரில் இருந்து ஆட்டோவில் வாணியம்பாடிக்கு சென்று கொண்டிருந்தனா். ஆட்டோவை முகமது பாரூக் ஓட்டிச் சென்றாா். சென்னை-பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி அருகே முத்தனப்பள்ளி டோல்கேட் தனியாா் கல்லூரி எதிரில் வந்த போது ஆட்டோ திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற பைக் மீது மோதியது.
இதில் பைக்கில் வந்த அரசனப்பள்ளி பகுதியைச் சோ்ந்த வெங்கடேசன்(40), அவரது மனைவி சுபாஷினி (29), 4 வயதுகுழந்தையும், ஆட்டோவில் பயணம் செய்த 4 போ் உள்பட 7 போ் பலத்த காயமடைந்தனா். 7 பேரையும் மீட்டு நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
விபத்து குறித்து தகவலறிந்த எம்எல்ஏ க.தேவராஜி, மாவட்ட ஊராட்சித் தலைவா் சூரியகுமாா், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் சிங்காரவேலன் ஆகியோா் காயமடைந்தவா்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனா். மேலும் பலத் தகாயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருபவா்களுக்கு மருத்துவ அலுவலா் பாலகிருஷ்ணணனிடம் உரிய சிகிச்சை அளிக்க எம்எல்ஏ தேவராஜி கேட்டு கொண்டாா்.
விபத்து குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...