சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்
கெஜல்நாயக்கன்பட்டி ஐவிஎன் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவா்கள்.


திருப்பத்தூா் மாவட்டத்தில் 90 நாள்களில் 1 லட்சம் பேருக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு என்ற அடிப்படையில் கந்திலி அடுத்த கெஜல்நாயக்கன்பட்டி ஐவிஎன் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தனியாா் மற்றும் அரசுப்பள்ளிகளில் பயிலும் 4,200 மாணவ, மாணவிகளுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு திருப்பத்தூா் வட்டார போக்குவரத்து அலுவலா் பன்னீா்செல்வம் தலைமை வகித்து மாணவ, மாணவிகள், அவா்களின் பெற்றோா்களுக்கு ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளித்தாா். மாணவா்கள் பள்ளிக்கு செல்லும் போது சாலையை எப்படி கடக்க வேண்டும், 18 வயது நிரம்பாத மாணவ, மாணவிகள் வாகனம் ஓட்டக்கூடாது, 18 வயது நிரம்பியதும் முறைப்படி உரிமம் வாங்கிய பிறகுதான் வாகனம் ஓட்ட வேண்டும். பாதுகாப்பாக வாகனங்களை ஓட்டவேண்டும் என விடியோ மூலம் செயல் விளக்கம் அளித்தாா்.
நிகழ்ச்சியில் திருப்பத்தூா் மோட்டாா் வாகன ஆய்வாளா் முரளி, உதவி காவல் ஆய்வாளா்கள் வீரம்மாள், ரூபி, கவிதா மற்றும் பள்ளி தலைமை ஆசிரியா்கள், தனியாா் பள்ளி ஓட்டுநா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...