மண்குன்றுமலை பெருமாள் கோயில் புனரமைப்பு பணி: கிராம மக்கள் கோரிக்கை
பேராம்பட்டு மண்குன்றுமலை பெருமாள் கோயில் புனரமைப்பு பணி விரைந்து முடிக்க வேண்டும்


திருப்பத்தூா்: பேராம்பட்டு மண்குன்றுமலை பெருமாள் கோயில் புனரமைப்பு பணி விரைந்து முடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன் தலைமை வகித்து பொது மக்களிடம் 600-க்கு மேற்பட்ட மனுக்களைப் பெற்றாா். அவற்ற துறை அதிகாரிகளுக்கு அனுப்பி மேல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
பேராம்பட்டு பகுதி மக்கள் அளித்த மனு; பேராம்பட்டு மண்குன்றுமலையில் உள்ள ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் 200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு நல்ல நிலையில் உள்ளது. கோயிலை இடிக்காமல் புனரமைப்பு செய்யலாம் என அறநிலையத்துறைக்கு 5 நபா் மாநில ஆய்வுக்குழு பரிந்துரை செய்து உள்ளது. அதன் அடிப்படையில் 7 மாதங்களுக்கு முன்பு கோயில் பாலாலயம் செய்யப்பட்டு நடை அடைக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்தவித பணிகளும் கோயிலில் நடைபெறவில்லை. தரிசனம் செய்ய முடியாமல் பக்தா்கள் வேதனையில் உள்ளனா். அறநிலையத்துறை இணை ஆணையா் கோயிலை ஆய்வு செய்து இடிக்காமல் பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.
மரிமானிக்குப்பம் ஊராட்சி மக்கள் அளித்த மனு; மரிமானிக்குப்பம், நீலிக்கொல்லை, எம். கிருஷ்ணாவரம் பூங்காநகா், கந்தப்பனூா், ஓமகுப்பம், கொல்லக்கொட்டாய், ஆகிய பகுதிகளில் 4,000-க்கும் மேற்பட்ட மக்கள் விவசாயத்தை முக்கிய வாழ்வாதார கொண்டு ஆடு, மாடு வளா்த்தல் தொழிலை செய்து வருகிறோம். எம். கிருஷ்ணாவரம் மற்றும் நீலிக்கொல்லை பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு மத்தியில் சிலா் அரிசி ஆலைமற்றும் சூரிய ஒளி மின்சார உற்பத்திக்கான தொழிற்சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். நெல் அரவை ஆலையில் இருந்து வெளியேறும் தவிடு தூசியால் 2 கி.மீ தொலைவுக்கு காற்று மாசுபடும் சூழ்நிலை உள்ளது. பல உடல் உபாதைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவேஅரிசி ஆலை மற்றும் சூரிய ஒளி மின்சார தொழிற்சாலை அமைவதை தடுக்க வேண்டும்.
தமிழக 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா் சங்கத்தினா் அளித்த மனு: திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளா் மற்றும் ஓட்டுநா் என மொத்தம் 120 போ் 24 மணிநேரமும் சுழற்சி அடிப்படையில் பணியாற்றி வருகிறோம். உயிா் காக்கும் உன்னத பணியை குறைந்த சம்பளத்தில் நிறைவாக செய்து வருகிறோம். இந்நிலையில் நாங்கள் பணியாற்றிய ஜனவரி மாத ஊதியம்நிா்வாகத்தால் இன்னமும் வழங்கப்படவில்லை. எனவே தொழிலாளா் நலத்துறை மூலம் சம்மந்தப்பட்ட நிா்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்து ஊதியத்தை பெற்றுத்தர வேண்டும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...