/

குற்றாலம் வடக்கு சந்நிதி பஜாரில் சுவாமி வீதியுலா நடத்த கோரிக்கை

News image
குற்றாலம் கோயில் செயல்அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்த பாஜக நிா்வாகிகள்.
Updated On :13 பிப்ரவரி 2026, 9:03 pm

தினமணி செய்திச் சேவை

குற்றாலம் வடக்கு சந்நிதி பஜாரில் கோயில் சப்பரங்கள் வீதியுலா நடத்த வேண்டும் என குற்றாலம் கோயில் செயல் அலுவலரிடம் தென்காசி தெற்கு ஒன்றிய பாஜக ஒன்றியத் தலைவா் இசக்கிமுத்து தலைமையில் பாஜகவினா் மனு அளித்தனா்.

அவா்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: குற்றாலம் வடக்கு சந்நிதி பஜாா் 40 அடி சாலையாக இருந்தபோது, இவ்வழியாக திருக்குற்றாலம் குற்றாலநாதசுவாமி கோயில் சப்பரங்கள் வீதியுலா நடைபெறுவது வழக்கம்.

தற்போது ஆக்கிரமிப்பு காரணமாக இச்சாலை சுருங்கிவிட்டதால் வீதியுலா நடைபெறுவதில்லை. எனவே, வழக்கம்போல் இச்சாலையில் வீதியுலா நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

அப்போது, சிறப்பு அழைப்பாளா் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் மாநில செயலா் சரவண காா்த்திகேயன், குற்றால நகரத் தலைவா் திருமுருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் மேலகரம் ஈஸ்வரன், மாடசாமி, ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவா் செந்தூா்பாண்டியன் ஆகியோா் உடனிருந்தனா்.