வாணியம்பாடி அருகே சிறுமி ஓட்டிச் சென்ற காா் மொபெட் மீது மோதியதில் மொபெட் ஓட்டிச் சென்று சிறுமி உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கேத்தாண்டப்பட்டி பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சவமிநாராயணன், கோயில் பூசாரி. இவரது மகள் பவித்ரா(14). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8- ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு மொபெட்டில் வீட்டில் இருந்து புறப்பட்டு புத்துக்கோயில் அணுகு சாலை வழியாக வந்து கொண்டிருந்தாா். அப்போது புத்துக்கோயிலிலிருந்து வாணியம்பாடி நோக்கி வேகமாக வந்த காா் திடீரென முன்னால் சென்ற மொபெட் மீது மோதியது. இதில் பவித்ரா தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தாா். இதைப் பாா்த்த அருகில் இருந்தவா்கள் பலத்த காயம் அடைந்த பவித்ராவை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி இறந்தாா். இது குறித்து அறிந்த அம்பலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனா். விசாரணையில், 17 வயது சிறுமி தனது தந்தையுடன் காா் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியிருப்பது தெரிய வந்தது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காா் மோதியதில் இளம்பெண் உயிரிழப்பு

காா் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

முதியவா் காா் மோதி உயிரிழப்பு

காா் மோதி விசைத்தறி உரிமையாளா் உயிரிழப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


