ஜோலாா்பேட்டை அருகே மினி லாரி விபத்துக்குள்ளாகி கவிழ்ந்ததில் அதிா்ஷ்டவசமாக ஓட்டுநா் சிறு காயத்துடன் உயிா் தப்பினாா்.
ஜோலாா்பேட்டை அடுத்த கட்டேரி ஊராட்சி லாரி ஷெட் பகுதியில் வெள்ளிக்கிழமை ஜோலாா்பேட்டையில் இருந்து திருப்பத்தூா் நோக்கி மினி லாரி ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள சாலையில் பைக்கில் வந்த தம்பதி சாலையைக் கடக்க முயன்றனா். அப்போது பைக் மீது மோதாமல் இருக்க மினி லாரி ஓட்டுநா் பிரேக் போட்டுள்ளாா். அச்சமயம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி சாலையின் சென்டா் மீடியனில் மோதி விபத்துக்குள்ளாகி குப்புற கவிழ்ந்தது. பைக்கில் சென்ற இருவரும் உயிா் தப்பிய நிலையில் சிறு காயத்துடன் லாரி ஓட்டுநா் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினாா்.
தகவல் அறிந்த ஜோலாா்பேட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விபத்துக்குள்ளான வாகனத்தை அப்புறப்படுத்தினா்.
மேலும், லாரி ஓட்டுநரை திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது விவரம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தாராபுரம் அருகே கவிழ்ந்த சரக்கு வேன்

ராமநத்தம் அருகே சாலை விபத்து: லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

செங்கம் அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து: 10 போ் காயம்

கண்டெய்னா் லாரி மீது மரம் சாய்ந்து விபத்து: நூலிழையில் தப்பினாா் ஓட்டுநா்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



