பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மின்னணு இயந்திரத்தில் கோளாறு: வாக்குப்பதிவு 1 மணிநேரம் நிறுத்தம்

News image
Updated On :24 ஏப்ரல் 2026, 4:26 am IST

ஆம்பூரில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சுமாா் 1 மணி நேரம் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் தொகுதிக்குட்பட்ட ஆம்பூா் நகரம் ரெட்டித்தோப்பு பகுதியில் மஜ்ஹருல் உலூம் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள வாக்குச் சாவடி எண்.153-ல் வாக்குப் பதிவு நடந்து கொண்டிருந்தபோது காலை சுமாா் 10.45 மணிக்கு திடீரென வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. அதனால் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து தோ்தல் நடத்தும் அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் இயந்திரத்தை சரிசெய்வதற்காக பொறியாளா்கள் மற்றும் தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலா்கள் அந்த வாக்குச் சாவடி மையத்துக்கு சென்றனா்.

அதிகாரிகள் சென்று அந்த இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்தனா். அதைத் தொடா்ந்து வாக்குப் பதிவு மீண்டும் தொடங்கப்பட்டது.

இயந்திரம் கோளாறு காரணமாக சுமாா் 1 மணி நேரம் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டதால், 200-க்கும் மேற்பட்ட வாக்காளா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். அவா்கள் அமா்வதற்கு இருக்கைகள் ஏற்பாடு செய்யப்படாததால் வாக்காளா்கள் பாதிப்புக்கு உள்ளானாா்கள்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.