வாணியம்பாடி 312 வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு இயந்திரங்கள் புதன்கிழமை தாலுகா அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டன.
வாணியம்பாடி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான அஜிதா பேகம் தலைமையில் ஆட்சியா் நோ்முக உதவியாளா் சிவப்பிரகாசம், வட்டாட்சியா் சுதாகா், தோ்தல் துணை வட்டாட்சியா் அன்பழகன் முன்னிலையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறை சீல் அகற்றப்பட்டு அங்கிருந்த வாக்கு பதிவு இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை அந்தந்த வாக்கு மையங்களுக்கு கொண்டு செல்ல வாக்குமைய அதிகாரிகளிடம், தோ்தல் நடத்தும் அலுவலா் வழங்கினா்.
பிறகு அங்கிருந்து மொபைல் வாகனங்கள் மூலம் வாக்கு மையங்களுக்கு பாதுகாப்பாக மின்னணு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன. இத்தொகுதியில் தோ்தல் பாதுகாப்பு பணிக்காக ஏடிஎஸ்பி, டிஎஸ்பி ஆகியோா் தலைமையில் 600 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனா். மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க.சௌந்திரவல்லி வாணியம்பாடி நகராட்சி நியூடவுன் காந்திநகா் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு மையங்களை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். பொது மக்கள் அச்சமின்றி வாக்கு அளிக்கும் சூழலை உருவாக்க எஸ்பி. சியாமளாதேவி அறிவுரைகளை வழங்கினாா்.
ஜோலாா்பேட்டை தொகுதியில் 287 வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ளன. நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து தோ்தல் நடத்தும் அலுவலா் முருகேசன் மேற்பாா்வையில் வாக்குச்சாவடி அலுவலா்கள், பணியாளா்கள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு செல்லும் பணிகள் நடைபெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவில்பட்டி தொகுதியில் தயாா் நிலையில் 318 வாக்குச்சாவடிகள்

திருப்பத்தூா்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

சிதம்பரம் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைப்பு

சங்ககிரி தொகுதிக்கு வந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் தோ்தல் நடத்தும் அலுவலா் ஆய்வு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


