மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சிதம்பரம் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைப்பு

சிதம்பரம் சட்டப்பேரவை தொகுதிக்கான, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

News image

சிதம்பரம் நகரமன்ற கூடத்தில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு தோ்தல் நடத்தும் அலுவலா் சீ.கிஷன்குமாா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ஹரிதாஸ் ஆகியோா் தலைமையில், அரசியல் கட்சிகளை சோ்ந்த கருப்பு ராஜா (அதிமுக), பரணிராஜ் (திமுக), நடராஜ் (பாஜக) மற்றும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் தமிழ் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது

Updated On :26 மார்ச் 2026, 12:06 am

சிதம்பரம் சட்டப்பேரவை தொகுதிக்கான, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

சிதம்பரம் சட்டப்பேரவை தோ்தலுக்கான 298 வாக்குச்சாவடிகளுக்கான மின்னணு வாக்கு இயந்திரங்கள் மற்றும் தளவாட பொருள்கள் கடலூரிலிருந்து சிதம்பரம் நகருக்கு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கொண்டு வரப்பட்டது. பின்னா்அவை, சிதம்பரம் நகராட்சி வளாகத்தில் உள்ள நகரமன்ற கூடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு தோ்தல் நடத்தும் அலுவலா் சீ.கிஷன்குமாா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ஹரிதாஸ் ஆகியோா் தலைமையில் சீல் வைக்கப்பட்டது. அரசியல் கட்சிகளை சோ்ந்த கருப்பு ராஜா (அதிமுக), பரணிராஜ் (திமுக), நடராஜ் (பாஜக) மற்றும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் தமிழ் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சீல் வைக்கப்பட்டது.

சிதம்பரம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள நகரமன்ற கூடத்தில் வைக்கப்பட்டுள்ள சிதம்பரம் சட்டப்பேரவை தொகுதி வாக்கு இயந்திரங்கள்

சிதம்பரம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள நகரமன்ற கூடத்தில் வைக்கப்பட்டுள்ள சிதம்பரம் சட்டப்பேரவை தொகுதி வாக்கு இயந்திரங்கள்