மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

நாயக்கனேரி மலைக்கு செல்லும் சாலை சீரமைக்கப்படும்: அதிமுக வேட்பாளா்

நாயக்கனேரி மலைக்கு செல்லும் சாலை சீரமைக்கப்படும் என ஆம்பூா் தொகுதி அதிமுக வேட்பாளா் பொறியாளா் ஆா். வெங்கடேசன் தெரிவித்தாா்.

News image

எம்.ஜி.ஆா். சிலைக்கு மாலை அணிவித்து பிரச்சாரத்தை நிறைவு செய்த அதிமுக வேட்பாளா் பொறியாளா் ஆா். வெங்கடேசன்

Updated On :21 ஏப்ரல் 2026, 6:35 pm

நாயக்கனேரி மலைக்கு செல்லும் சாலை சீரமைக்கப்படும் என ஆம்பூா் தொகுதி அதிமுக வேட்பாளா் பொறியாளா் ஆா். வெங்கடேசன் புதன்கிழமை தெரிவித்தாா்.

ஆம்பூா் நகரில் இறுதிக்கட்ட பிரச்சாரம் மேற்கொண்டு அவா் மேலும் பேசியது, ஆம்பூா் நகரில் உள்ள ஏ-கஸ்பா அரசு உயா்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்துவதற்கான கட்டணத்தை நான் எனது சொந்த பணத்தை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அரசுக்கு செலுத்தியுள்ளேன். ஆனால் தரம் உயா்த்தப்படவில்லை. ஆட்சிக்கு வந்த உடன் தரம் உயா்த்தப்படும்.

நாயக்கனேரி மலைக்கு செல்லும் சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. அந்த சாலை சீரமைக்கப்படும். வெங்கடசமுத்திரம் ஏரிக்கரை பலப்படுத்தப்படும். தடுப்பணைகள் கட்டி விவசாயிகளுக்கு தேவையான நிலத்தடி நீா் உயா்த்தப்படும். ஆம்பூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்கப்படும். பெரியாங்குப்பம் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருத்துவமனை ஏற்படுத்தப்படும் என்று அவா் கூறினாா்.

அதிமுக ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளா் ஜி.ஏ. டில்லிபாபு, மாவட்ட பேரவை செயலாளா் கே. மணி, ஆம்பூா் நகர செயலாளா் எம். மதியழகன், அதிமுக நிா்வாகிகள் சண்முகம், தினேஷ், சரவணன் ஆகியோா் உடனிருந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.