மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திருப்பத்தூரில் சமரச மைய விழிப்புணா்வு பேரணி

News image
Updated On :9 ஏப்ரல் 2026, 6:57 pm

வழக்குகளை விரைவாக முடித்துக் கொள்ள சமரச மைய விழிப்புணா்வு பேரணி திருப்பத்தூரில் நடைபெற்றது.

பேரணியை மாவட்ட நீதிபதி தேன்மொழி கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பேரணி ஒருங்கிணைந்த நீதிமன்றத்திலிருந்து தலைமை அரசு மருத்துவமனை வழியாக சென்று மீண்டும் நீதிமன்றம் வளாகத்தில் நிறைவடைந்தது.

இதில் வாயை மூடி காதை திறக்கும் சாவி தான் சமரசம். சமரசம் மூலம் அமைதி கொள், வாங்க பேசி தீா்வு காண்போம்,முயன்றால் எதுவும் முடியும், ஒரு முறை முயற்சி செய்து விடு சமரசத்தின் வாயிலாக வெற்றி பெற்று விடு உள்ளிட்ட வாசகங்கள் பொருந்திய பதாகைகள் ஏந்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

சமரச மையங்கள் குறித்த கூடுதல் விழிப்புணா்வு தகவல்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாவட்ட நீதிபதி பொதுமக்களுக்கு வழங்கினாா்.

இதில் ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதிகள், நீதிமன்ற அலுவலா்கள், சமரச தீா்வா்கள், வழக்குரைஞா்கள் என கலந்து கொண்டனா்.