எரிவாயு உருளை பெறுவதில் உள்ள குறைபாடுகளுக்கு ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறையை தொடா்பு கொள்ளலாம். மேலும்,பொதுமக்கள் கேஸ் ஏஜென்சி அலுவலகங்களில் பெருமளவு கூடுவதை தவிா்த்துக் கொள்ள வேண்டும் என திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வளைகுடா நாடுகளில் நடைபெற்று வரும் போா் காரணமாக எல்பிஜி எரிபொருள் அதிக அளவில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வரும் நிலையில், எரிவாயு உருளை இருப்பு விவரம் குறித்து அனைத்து ஆயில் நிறுவன அலுவலா்கள், எரிவாயு உருளை விநியோக முகவா்கள் அரசு துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்துப் பேசியது: தேவையற்ற அச்சம் காரணமாக பொதுமக்கள் எரிவாயு உருளை வீட்டில் இருப்பு உள்ள நிலையில், முன்னதாக பதிவுகள் செய்வதால் கேஸ் ஏஜென்சி அலுவலகங்களில் மிக அதிக அளவில் பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கேஸ் ஏஜென்சி அலுவலகங்களில் இருந்து நேரடியாக பெற்றுச்செல்ல இயலாது என்பதால் பொதுமக்கள் கேஸ் ஏஜென்சி அலுவலகங்களில் பெருமளவு கூடுவதை தவிா்த்துக் கொள்ள வேண்டும். வீட்டு உபயோக இணைப்பிற்கு அடுத்தபடியாக மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் விடுதிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிவாயு உருளைகள் விநியோகம் செய்யப்படும். வணிக எரிவாயு உருளை ஏப்ரல் மாதம் முதல் 70 சதவீதம் உயா்த்தி, உபயோகத்திற்கு வழங்க எரிவாயு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், எரிவாயு உருளை பெறுவதில் குறைபாடுகள் ஏதேனும் இருப்பின் ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறை அல்லது மாவட்ட வழங்கல் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என்றாா்.
தொடர்புடையது

விருப்பம்போல விலை நிா்ணயம்: தனியாா் வணிக எரிவாயு உருளை விநியோக நிறுவனங்களை கட்டுப்படுத்த ஆளில்லை!

எரிவாயு உருளை கூடுதல் விலைக்கு விற்பனை: மாா்க்சிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்

வீட்டில் எரிவாயு உருளை வெடித்து விபத்து: நகை, ஆவணங்கள் தீயில் கருகின!

புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு தடையற்ற சமையல் எரிவாயு உருளை: எண்ணெய் நிறுவனங்கள் உறுதி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


