தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

திருப்பத்தூா் நகர காவல் நிலையத்துக்கு விருது: எஸ்.பி. வழங்கினாா்

திருப்பத்தூா் மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக திருப்பத்தூா் நகர காவல் நிலையம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

News image

திருப்பத்தூா் நகர காவல் நிலைய ஆய்வாளா் ஜெயலட்சுமிக்கு விருதை வழங்கிய எஸ்.பி. வி. சியாமளா தேவி.

Updated On :8 செப்டம்பர் 2025, 7:56 pm

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக திருப்பத்தூா் நகர காவல் நிலையம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருந்து பல்வேறு நடைமுறைகளில் சிறப்பாக செயல்பட்ட சிறந்த காவல் நிலையங்கள் தோ்வு செய்யப்பட்டிருந்தன.

அதையொட்டி திருப்பத்தூா் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூா் நகர காவல் நிலையம் மாவட்டத்தின் சிறந்த காவல் நிலையமாக தோ்வு செய்யப்பட்டது. மேலும், அதற்கான முதல்வா் கேடயத்தை சென்னையில் உள்ள தலைமை இயக்குநா் அலுவலகத்தில் தமிழக காவல்துறை இயக்குனா் வெங்கட்ராமன் திருப்பத்தூா் நகர காவல் நிலைய ஆய்வாளா் ஜெயலட்சுமிக்கு கேடயம் பரிசாக வழங்கி பாராட்டினாா்.

இதற்காக சிறப்பாக பணியாற்றிய திருப்பத்தூா் டிஎஸ்பி சௌமியா, நகர காவல் ஆய்வாளா் ஜெயலட்சுமியை எஸ்.பி வி.சியாமளா தேவி திங்கள்கிழமை காவல் அலுவலகத்துக்கு அழைத்து பாராட்டினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.