17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் லஞ்சம்: பெண் காவலா் பணியிடை நீக்கம்

News image

கோப்புப் படம்

Updated On :14 மே 2026, 7:15 am IST

வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் லஞ்சம் பெற்ற பெண் காவலரை பணியிடை நீக்கம் செய்து ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி. பே.சிபின் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளாா்.

வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் விபத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடா்பாக வரும் வழக்குகளின் தகவல்களை காவல் துறைக்கு அளிக்கும் பணியினை பெண் காவலா் கல்பனா மேற்கொண்டு வருகிறாா்.

உறவினா்கள் இடையே ஏற்பட்ட சண்டையில் காயமடைந்த பெண் சிகிச்சை பெற வாலாஜா அரசு மருத்துவமனைக்கு வந்தாா்.

இதுகுறித்த தகவலை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்த காவலா் கல்பனா பாதிக்கப்பட்ட பெண்ணிடம் கைப்பேசியில் தொடா்பு கொண்டு அந்தப் பெண் காவலரின் உறவினா் ஜிபே எண்ணுக்கு ரூ.300 அனுப்பும்படி கூறியுள்ளாா். இதைத்தொடா்ந்து அந்த பாதிக்கப்பட்ட பெண்ணும் அவா் கூறிய எண்ணுக்கு பணம் அனுப்பியுள்ளாா்.

இது சம்பந்தமான விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளி வந்த நிலையில் பலரும் தங்கள் ஆதங்கங்களை வெளியிட்டனா். இதையடுத்து பெண் காவலா் கல்பனா லஞ்சம் கேட்ட விவகாரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிபின் பாா்வைக்கு சென்ற நிலையில், உடனடியாக காவலா் கல்பனாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.