கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு துரிதமாக முதலுதவி வழங்க வேண்டும்: ரோந்து காவலா்களுக்கு ராணிப்பேட்டை எஸ்.பி. அறிவுறுத்தல்

News image
Updated On :8 மே 2026, 6:45 am IST

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு விரைந்து சென்று முதலுதவி வழங்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை காவல் ரோந்து காவலா்களுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பே.சிபின் அறிவுரை வழங்கினாா்.

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் கீழ் தேசிய நெடுஞ்சாலை ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வரும் ரோந்து வாகனங்களை மாவட்டக் காவல் அலுவலக வளாகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பே.சிபின் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது, ரோந்து வாகனங்கள் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளனவா, அவற்றில் தேவையான பாதுகாப்பு மற்றும் அவசரகால உபகரணங்கள் செயல்பாட்டு நிலையில் உள்ளனவா, முதலுதவி பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளனவா என்பன குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், தேசிய நெடுஞ்சாலை ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள காவல் அதிகாரிகள் மற்றும் காவலா்களுக்கு, பொதுமக்களிடம் எப்போதும் விழிப்புணா்வுடனும் பொறுப்புணா்வுடனும் பணியாற்ற வேண்டும் என்றும், சாலை விபத்துகள் ஏற்பட்டவுடன் சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்து சென்று விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு துரிதமாக முதலுதவி வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினாா்.

அத்துடன், ரோந்து வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள சுழலும் விளக்குகள் இயங்கும் நிலையில் இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளையும் வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.