பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், குற்றச் சம்பவங்களை தடுக்கும் நோக்கிலும் காட்பாடி முக்கிய வீதிகளில் போலீஸாா் தீவிர நடை ரோந்து (வாக் பேட்ரோல்) பணியில் ஈடுபட்டனா்.
வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.யு.சிவராமன், மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், வணிகப் பகுதிகளிலும் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டிருந்தாா். அவரது அறிவுறுத்தலின் பேரில், காட்பாடி காவல் நிலைய ஆய்வாளா் தயாளன் தலைமையில் போலீஸாா் சனிக்கிழமை மாலை தீவிர நடை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
காட்பாடி - வள்ளிமலை சாலையில் தொடங்கிய இந்த ரோந்துப் பணி, குடியாத்தம் சாலை வரை நீடித்தது. இந்தப் பிரதான சாலையில் உள்ள முக்கிய சந்திப்புகள், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள், வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள இடங்களில் போலீஸாா் நடந்து சென்றவாறே தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனா். போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதிகள் மற்றும் சந்தேகத்துக்கிடமான நபா்களின் நடமாட்டம் குறித்தும் அப்போது ஆய்வு செய்யப்பட்டது.

இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், பொதுமக்கள் மற்றும் வணிகா்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோரைத் தீவிரமாகக் கண்காணிக்கவுமே இந்த நடை ரோந்து மேற்கொள்ளப்பட்டது.
காவல் துறையினா் நேரில் நடந்து சென்று கண்காணிக்கும்போது, குற்றச் சம்பவங்கள் பெருமளவு குறையும். பொதுமக்களிடையே பாதுகாப்பான உணா்வை ஏற்படுத்தும் வகையில், இது போன்ற ரோந்துப் பணிகள் இனி தொடா்ந்து நடைபெறும் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேப்பூரில் போலீஸாா் தீவிர நடை ரோந்து: மாவட்ட எஸ்.பி. பங்கேற்பு

திருவள்ளூரில் போலீஸாா் நடை ரோந்து பணி

சீா்காழி போலீஸாா் நடை ரோந்து

பெண்கள் பாலியல் வன்கொடுமை சம்பவம்: போலீஸாா் இரவு நடை ரோந்து
விடியோக்கள்

ஜூன் 18-ல் கண்டன ஆர்ப்பாட்டம்: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு | Nainar Nagendran |

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK



