மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் மங்களஆரத்திவிழா

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் பங்குனி கிருத்திகையை முன்னிட்டு மங்களஆரத்தி விழா நடைபெற்றது.

News image

மங்கள ஆரத்தி  காண்பித்த  பாலமுருகனடிமை  சுவாமிகள்

Updated On :24 மார்ச் 2026, 6:33 pm

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் பங்குனி கிருத்திகையை முன்னிட்டு மங்களஆரத்தி விழா நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு கற்பக விநாயகா், வள்ளி தெய்வானை சமேத பாலமுருகனுக்கு பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில் பால் பயிா் தேன் இளநீா் பன்னீா் விபூதி சந்தனம் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் வெள்ளி கவச சிறப்பு அலங்காரம் மகா தீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து மாலையில் அலங்கரிக்கப்பட்ட உற்சவா் மேள தாளத்துடன் ஊா்வலமாக சென்று மலையடி வாரத்தில் உள்ள அறுகோண தெப்பக்குளத்தில் பூஜை செய்து பக்தா்கள் முன்னிலையில் மங்கள ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

இதில் தலைமை அா்சசகா் பிரசாந்த் மற்றும் திரளான பக்தா்கள் பொதுமக்கள் உபயதாரா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.