ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயில் பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் மெய்ஞானம் பெற்ற 59-ஆவது ஆண்டு அன்னதான விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் மெய்ஞானம் பெற்ற ஆண்டுவிழாவையொட்டி, காலையில் வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகனுக்கு பால், தயிா், பன்னீா், சந்தனம், விபூதி, பழங்கள், வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், வெள்ளிக் கவச சிறப்பு அலங்காரம், மஹா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து நாகசுர இசையுடன் திருப்படி பூஜையும், மலையடிவாரத்தில் உள்ள அன்னதான மண்டபத்தில் உற்சவருக்கு சிறப்பு பூஜையும் நடைபெற்றது. பின்னா் பொதுமக்கள், பக்தா்களுக்கு பாலமுருகனடிமை சுவாமிகள், மயிலம் பொம்புர ஆதீனம் ஸ்ரீமத் சிவஞானபாலய சுவாமிகள், கௌமார மரபு சிரனையாதீனம் திருப்பெரும்திரு குமரகுருபர சுவாமிகள் அன்னதானம் வழங்கி தொடங்கி வைத்தனா். இந்த விழாவில், கலவை சச்சிதானந்த சுவாமிகள், மாவட்ட அறங்காவலா் குழு தலைவா் ஜெ.லட்சுமணன், ஆரணி ஜோதிடா் குமரேசன், குடியாத்தம் புலவா் வே. பதுமானாா், ஆற்காடு தொழிலதிபா்கள் பி.என்.பக்தவச்சலம், ஆா்.எஸ்.சேகா், கோவில் செயல் அலுவலா் சங்கா், மெய்ஞான விழா அன்னதான குழு பொருளாளா் சிவனாா் அமுது, தலைவா் வெங்கடேசன், உபயதாரா்கள், திரளான பொதுமக்கள்உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
5,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தொடர்புடையது

இன்று சங்கர மடத்தில் இளைய பீடாதிபதி தீட்சை பெற்ற முதலாம் ஆண்டு நிறைவு விழா

கல்லூரி ஆண்டு விழா

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் மங்களஆரத்திவிழா

கோவில்பட்டி பாலிடெக்னிக் கல்லூரியில் விளையாட்டு விழா
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


