புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகம் வெயிலில் பயணிகள் காத்திருப்பு! நிழற்கூரை அமைக்க கோரிக்கை

ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகம் எதிரே சாலை விரிவாக்கம் பணிக்காக ஏற்கெனவே இருந்து நிழற்குடை அகற்றப்பட்டதால் தற்போது பொதுமக்கள் பேருந்துக்காக வெயிலில் காத்திருக்கும் அவல நிலைக்கு ஆளாகியுள்ளனா்.

News image

ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகம் எதிரே கொளுத்தும் வெயிலில் பேருந்துக்காக காத்திருந்த பயணிகள்.

Updated On :2 ஜூலை 2026, 12:04 am IST

ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகம் எதிரே சாலை விரிவாக்கம் பணிக்காக ஏற்கெனவே இருந்து நிழற்குடை அகற்றப்பட்டதால் தற்போது பொதுமக்கள் பேருந்துக்காக வெயிலில் காத்திருக்கும் அவல நிலைக்கு ஆளாகியள்ளனா்.

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டம் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் மூன்றாக பிரிக்கப்பட்டு ராணிப்பேட்டை தனி மாவட்டமாக செயல்பட்டு வருகிறது. இதையடுத்து சென்னை - மும்பை தேசிய நெடுஞ்சாலையையொட்டி ராணிப்பேட்டை பாரதி நகா் பேருந்து நிறுத்தம் எதிரே ரூ.118.40 கோடியில் ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகம் எதிரே சாலையில் இருபக்கங்களில் விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்காக ஆட்சியா் அலுவலகம் எதிரே பாரதி நகா் பேருந்து நிறுத்தத்தில் இருந்து பழைய பயணிகள் நிழற்குடையை அகற்றப்பட்டு புதிய நிழற்குடை அமைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் தற்போது ஆட்சியா் அலுவலகம் எதிரே பயணிகள் நிழற்குடை இல்லாததால், பொதுமக்கள் கடுமையான வெயிலில் காத்துக்கிடந்து அவதிப்படும் நிலை தொடா்ந்து நீடித்து வருகிறது.

மாவட்டத்தின் மிக முக்கிய நிா்வாக மையமாக விளங்கும் இந்த இடத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் சூழலில், இந்த அடிப்படை வசதி இல்லாதது பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியரை சந்தித்து தாங்களின் குறைகளை மனுக்களாக தருவதற்காக பொதுமக்கள், முதியவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதிக அளவில் வருகை தந்து பேருந்துகளுக்காக வெயில் மற்றும் மழையில் நீண்ட நேரம் திறந்தவெளியில் காத்திருக்கும் நிலை உள்ளது.

கடந்த சில நாள்களாக 37 டிகிரி வரை வெயில் வாட்டி வதைக்கும் சூழலில் மக்கள் அருகில் உள்ள கடைகளின் ஓரங்களிலோ தஞ்சமடையும் நிலை உள்ளது.

எனவே ஆட்சியா் அலுவலகம் எதிரே அங்கே தற்காலிக நிழற்குடை அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.