வேதாரண்யத்தில் விவசாயிகள் பெற்ற கூட்டுறவு பயிா்க் கடனை பாகுபாடு இல்லாமல் முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, விவசாயிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வேதாரண்யம் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே வட்டார விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவா் டி.வி. ராஜன் தலைமை வகித்தாா்.
சங்கத்தின் செயலாளா் ஒளிச்சந்திரன், நிா்வாகிகள் அருண்குமாா், அறிவழகன், கணேசன், பரமேஸ்வரன், மணியன் உள்ளிட்ட முன்னோடி விவசாயிகள் பங்கேற்று கோரிக்கைகளை விளக்கி பேசினா்.
கடந்த சாகுபடி பருவத்துக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகள் பெற்ற பயிா்க் கடனை பாகுபாடு இல்லாமல் அனைத்து விவசாயிகளுக்கும் பயனளிக்கும் வகையில் தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும், வேதாரண்யம் பகுதி நீா் நிலைகளில் அடா்ந்து வளா்ந்துள்ள ஆகாயத் தாமரைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










