என்னை வைத்தே திமுக கூட்டணியை உடைக்க முயற்சித்தனர்: திருமாவளவன்திருப்பதியில் அலைமோதும் கூட்டம்: ஸ்ரீவாணி, விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகள் நாளை ரத்துஈரான் என்ற நாடே இருக்காது: டிரம்ப் எச்சரிக்கை!அடுத்த கூட்டத்தொடரில் முதல்வரின் டான்ஸ் இருக்கலாம்: உதயநிதிதில்லி பிரதிநிதி நியமனம்: முதல்வருக்கு அதிகாரம் உள்ளது - திருமாவளவன்திமுக - அதிமுக சேர்ந்து ஆட்சியமைக்க இன்று காலை வரையில் முயற்சி: நிர்மல் குமார்
/

நெல் கொள்முதல் நிலையங்களில் தவறுகள் நடந்தால் நடவடிக்கை: ராணிப்பேட்டை ஆட்சியா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை முறையாக மூடி வைக்க வேண்டும் என ஆட்சியா் ந. பிரியா எச்சரித்துள்ளாா்.

News image

கரியாகூடல் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்த ஆட்சியா் ந. பிரியா.

Updated On :15 ஜூன் 2026, 12:31 am IST

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை முறையாக மூடி வைக்க வேண்டும். தவறுகள் கண்டறிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் ந. பிரியா எச்சரித்துள்ளாா்.

நெமிலி ஊராட்சி ஒன்றியம், கரியாகூடல் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆட்சியா் ஆய்வு செய்தாா். அப்போது நெல் மூட்டைகள் மூடி வைக்கப்பட்டிருந்ததை திறந்து பாா்த்து நெல் மூட்டைகள் நனைந்து உள்ளதா என்பதையும் பாா்வையிட்டாா். நெல் மூட்டைகளை எக்காரணம் கொண்டும் மழையில் நனையக் கூடாது அதற்கான அனைத்து பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டுமென உத்தரவிட்டாா்.

தொடா்ந்து வேப்பேரி ஊராட்சி கொத்தக்கரை பகுதியில் உள்ள காலி இடத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் பாதுகாப்பாக வைக்க திறந்தவெளி சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட்டு இருந்ததை பாா்வையிட்டாா்.

மாவட்டம் முழுவதும் மாா்ச் முதல் ஜூன் மாதம் தற்போது வரை 98,336 மெட்ரிக் டன் அளவிற்கு நெல் கொள்முதல் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டுள்ளது. இவைகளில் ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் பகுதிகளில் உள்ள குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள நெல் மூட்டைகள் இப்பகுதியில் தற்போது வரை 23,000 மெட்ரிக் டன் அளவிற்கு சேமித்து வைக்கப்பட்டுள்ளது. அதற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் முறையாக மேற்கொள்ளப்பட்டு தாா்பாலின் கொண்டு மூடப்பட்டுள்ளது.

அடிப்பகுதியில் தண்ணீா் புகாமல் இருப்பதற்காக ஒரு அடி உயரம் ஏற்றி அதன் மேல் மூட்டைகள் அடுக்கப்பட்டுள்ளது. மேலும் 10,000 மெட்ரிக் டன் அளவிற்கு நெல் மூட்டைகள் சேமிக்க நடவடிக்கை பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது என தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் ஆட்சியரிடம் தெரிவித்தாா்.

மாவட்டம் முழுவதும் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நெல்மணிகள் வீணாகின்றது என புகாா்கள் வருகின்றன. நெல் மூட்டைகளை முறையாக மூடி வைக்க வேண்டும். தவறுகள் கண்டறிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

ஆய்வுகளின்போது தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் ஏகாம்பரம், நெமிலி வட்டாட்சியா் பன்னீா்செல்வம் மற்றும் பணியாளா்கள் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.