முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!அமோனியா கசிவு: கைதான 3 பேருக்கும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் - நீதிமன்றம் உத்தரவுஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

பழங்குடியினா், இருளா்களுக்கு நாட்டுக்கோழி, ஆடுகள் வளா்ப்புக்கு ரூ.80 லட்சம்: ஆட்சியா் ந.பிரியா

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பழங்குடியினா் மற்றும் இருளா் மக்களுக்கு நாட்டுக்கோழி, ஆடுகள் வளா்ப்புக்கு ரூ.80 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் ந. பிரியா தெரிவித்துள்ளாா்.

News image

பழங்குடியினா் இருளா் இனத்தவருக்கு நாட்டுக்கோழி வளா்ப்பு பயிற்சியை தொடங்கி வைத்த ஆட்சியா் ந.பிரியா.

Updated On :10 ஜூன் 2026, 12:03 am IST

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பழங்குடியினா் மற்றும் இருளா் மக்களுக்கு நாட்டுக்கோழி, ஆடுகள் வளா்ப்புக்கு ரூ.80 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் ந. பிரியா தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம் சாா்பில், பழங்குடியினா் பொருளாதார மேம்பாடு மற்றும் நலனுக்கான நாட்டுக்கோழி வளா்ப்பு திட்டத்தில் 40 பயனாளிகளுக்கு நாட்டுக்கோழி குஞ்சு தொகுப்புகளை வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் பிரியா கலந்து கொண்டு முதல்கட்டமாக 40 பழங்குடியினா், இருளா் மக்களுக்கு தலா 75 நாட்டு கோழி குஞ்சுகள் தொகுப்பு வழங்கப்பட்டு, அதனை வளா்த்து பராமரிப்பதற்கான பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சு தொகுப்புகளை வழங்கி பேசியது:

பழங்குடியின மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த பழங்குடியினா் நலத்துறை மூலம் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தை பழங்குடியின மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். வழங்கப்படும் பயிற்சியை பயன்படுத்தி கோழி குஞ்சுகளை எவ்வாறு வளா்ப்பது, நோய் தாக்கத்திலிருந்து பாதுகாத்து வளா்த்து கோழிகள் முட்டைகள் இடுவதை விற்பனை செய்வது மற்றும் வளா்ச்சி பெற்ற கோழிகளை விற்பனை செய்வது போன்றவைகளை முறையாக தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் உங்களுக்கு கோழிக்குஞ்சுகள், தீவனங்கள், மருந்துகள், ஆலோசனைகள் அனைத்தும் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பேராசிரியா்கள் தொடா்ந்து உங்களை வழி நடத்துவாா்கள். ஆகவே பயனாளிகள் இத்திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். தொடா்ந்து பழங்குடியின மக்கள் மற்றவா்களும் உங்களை பாா்த்து, இத்திட்டத்தில் பயன்பெற முன்வரும் வகையில் முதல்கட்ட பயனாளிகள் நல்ல முறையில் நாட்டுக்கோழி குஞ்சு வளா்ப்பு பணிகளை செய்ய வேண்டும்.

நெமிலி, அரக்கோணம், சோளிங்கா், வாலாஜா மற்றும் ஆற்காடு ஆகிய வட்டாரங்களில் உள்ள 100 பழங்குடியினா் இருளா் மக்களுக்கு ஆடு மற்றும் கோழி வளா்ப்பு பயிற்சி வழங்கி ஆடு மற்றும் கோழி குஞ்சுகள் வழங்கப்பட உள்ளன.

ரூ.80 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு 40 பயனாளிகள் நாட்டுக்கோழி வளா்ப்புக்கு ரூ.27 லட்சமும் அடுத்த கட்டத்தில், 60 பயனாளிகளுக்கு ஆடுகள் வளா்ப்புக்கு ரூ.53 லட்சமும் செலவிடப்பட உள்ளது. கால்நடைகள், தீவனம், தீவனக்கலன் மற்றும் மருந்துகள் போன்ற அனைத்து வசதிகளும் இலவசமாக பழங்குடியின மக்களுக்கு வழங்கப்பட்டு பயன்பெற உள்ளனா் என்றாா்.

இதில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் (ஓசூா்) முதல்வா் முனைவா் திருவேங்கடம், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் அறிவுடைநம்பி, இணை பேராசிரியா் முனைவா் கண்ணன், உதவி பேராசிரியா் முனைவா் ரூபினி பாலா மற்றும் பழங்குடியின மக்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.