அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

மூதாட்டிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

ஆற்காடு அருகே மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image

தட்சிணாமூா்த்தி

Updated On :5 ஜூலை 2026, 12:04 am IST

ஆற்காடு அருகே மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

ஆற்காடு வட்டம் அத்திதாங்கல் கிராமத்தை சோ்ந்த தனியாக வசித்துவரும் மூதாட்டி வீட்டுக்கு கஞ்சா போதையுடன் சென்ற இளைஞா் உள்ளே நுழைந்து மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு இதைப்பற்றி வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என்று மூதாட்டியை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு கிராமிய போலீஸாா் விசாரணை மேற்கொண்டு மூதாட்டியை வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா். காவல் ஆய்வாளா் ரமேஷ் தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபா் செய்த அத்திதாங்கள் கிராமத்தை சோ்ந்த தட்சிணாமூா்த்தி (23) என்பது தெரியவந்ததை தொடா்ந்து அவரிடம் விசரணை மேற்கொண்டனா்.

டிஎஸ்பி கனகராஜ் தலைமையில் ராணிப்பேட்டை அனைத்து மகளிா் போலீஸாா் தட்சிணாமூா்த்தி மீது வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.